சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் கரையோரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவை அகற்றும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 16 மதகுகள் வழியாக காவிரியாற்றுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சேமிப்பு தொட்டி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் பர்னஸ் எண்ணெய் செல்லும் குழாய் சேதமடைந்து எண்ணெய் வெளியேறியது. இது காவிரி நீரில் கலந்ததால் தண்ணீரின் நிறம் மாறி மாசடைந்து வருகிறது. ஆகவே, எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை அனல் மின் நிலைய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3-வது நாளாக பணிகள் நடைபெறும் நிலையில், மாலைக்குள் பணிகள் நிறைவடையும் என ஊழியர்கள் தகவலளித்துள்ளனர்.