சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ஆளுநருடன் மோதல் என்னும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் அரசு அச்சப்படுவதாகவும், “கெட் அவுட் ரவி போஸ்டர்களுக்கு திமுகவே ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். அரசுக்கு எதிராக பேசினால் சட்டப்பேரவை நேரலை துண்டிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கூட்டணி கட்சிகளுக்கு கூட ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். திமுகவின் ஆர்ப்பாட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சாடினார்.