சிஏஏ வாயிலாக 40 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
பீகாரின் ஆரா பகுதியைச் சேர்ந்த சுமித்ரா பிரசாத் என்பவர் 1970ஆம் ஆண்டு தனது அத்தையுடன் கிழக்கு பாகிஸ்தான் சென்ற நிலையில், அது வங்கதேசம் என்று தனி நாடாக அறிவிக்கப்பட்டது.
1985ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவர், பீகாரின் கடிஹார் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் தன் விசாவை புதுப்பித்து வந்துள்ளார். அவர், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த நிலையில், விசாரணைகளுக்குப் பிறகு அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.