ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மாலை விஜயவாடா சென்றார்.
வெங்கடாதிரி வண்டில்லுவில் இருந்து திறந்த ஜீப்பில் சென்ற பிரதமருக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், உள்ளிட்டோரும் சென்றனர்.