கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நடப்பாண்டிற்கான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி கடந்த 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, மன்னீஸ்வரர் மற்றும் அருந்தவச்செல்வி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், கோயில் திருமண மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் மன்னீஸ்வரர் மற்றும் அருந்தவச்செல்வி தாயாருக்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.