திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள் மட்டுமே தேரை வடம்பிடித்து இழுக்க, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்து கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.