சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடக்கோரி, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற “Reversis Osmosis” தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளன எனக்கூறி தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணைகள் முடிவடைந்து, நீதிபதிகள், ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து வேலூர் பாலாற்று பகுதிகளில் மாசு தொடர்பாக கண்காணிக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், விதிகளை மீறி செயல்படும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி தோல் தொழிற்சாலைகளிடமிருந்து இழப்பீடு தொகையைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்

மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளடங்கிய குழு அமைத்து தோல் தொழிற்சாலை கழிவுகளை பாலாற்றில் கலப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் சுற்றுச்சூழல் மாசையும், பாலாறு மாசடைவதையும் தடுக்க உரிய பரிந்துரைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் விதிகளை அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும், விதிகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: Vellore Environment Monitoring GroupReversis Osmosissupreme courtvelloretanneries ownerspolluting the environment
Share
Tweet
SendShare
Previous Post

காணும் பொங்கல் தினத்தில் குப்பை போடும் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Next Post

காந்தி விழா தொடர்பாக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies