ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரி மாதம் மிகவும் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே மாதத்தில் 40 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை கூட விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வெறும் 8 ஆயிரத்து 647 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விற்பனை செய்திருக்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன்பக்க சஸ்பென்ஷன் உடைவது, பேட்டரி தீப்பிடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரியிருக்கின்றன. இதுதொடர்பாக அதிகளவில் புகார்கள் எழுந்ததே ஓலாவின் வீழ்ச்சிக்கும் காரணம் என கூறப்படுகிறது.