சீனா-அமெரிக்கா வர்த்தக போர் : தடுமாறும் உலக பொருளாதாரம் - வழிகாட்டும்  ZOHO ஸ்ரீதர் வேம்பு!
Sep 20, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனா-அமெரிக்கா வர்த்தக போர் : தடுமாறும் உலக பொருளாதாரம் – வழிகாட்டும்  ZOHO ஸ்ரீதர் வேம்பு!

Murugesan M by Murugesan M
Apr 9, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரியின்  எதிரொலியால், அமெரிக்காவைத் தவிர்த்து பிறநாடுகளுக்குச்  சீனா, ஏற்றுமதியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மலிவு விலை  பொருட்கள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க,  ஏழு அம்சத் திட்டத்தை  ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு பரிந்துரைத்துள்ளார். இது  பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சீனா மீது ஏற்கனவே 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கூடுதலாக 34 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. மொத்தமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குச் சீனா கூடுதலாக 34 சதவீத வரி விதித்துள்ளது.

சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர், சர்வதேச அளவில், பங்குச்சந்தை உட்பட பல்வேறு துறைகளில், பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சீனா தனது ஏற்றுமதிகளை வேறு நாடுகளுக்குத் திருப்பி விடக்கூடும் என்ற கவலையும் அச்சமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், சீனப் பொருட்களின் இறக்குமதிகள் மீதான  கண்காணிப்பை மத்திய அரசு  தீவிரப் படுத்தியுள்ளது. ஏற்கெனவே, குண்டூசி முதல் மொபைல் போன் வரை, லைட்டர் தொடங்கி பட்டாசு வரை சீப்பு முதல் செருப்பு வரை எந்தப் பொருளானாலும், உலகமெங்கும் சீனாவின் மலிவு விலை பொருட்களின் ஆதிக்கமே  மேலோங்கி இருக்கிறது.   இந்தியப் பொருட்களை விடச் சீனப் பொருட்களின் விலை சுமார் 70 சதவீதம் வரை குறைவாக உள்ளது.

உணவு மற்றும் எரிசக்தி முதல் தொழிற்சாலை மற்றும் ரூபாய் அடிப்படையிலான வர்த்தகம் வரை, சீனா  முன்வைக்கும் வர்த்தகச் சவால்களைச் சமாளிக்க ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, 7 அம்ச திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார்.

உடைந்து கொண்டிருக்கும் உலக ஒழுங்கில், இந்தியாவுக்கான வரைபடம் என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதோடு, மற்ற நாடுகள் தடுமாறும் இடங்களில், இந்தியாவே வழி நடத்தும் என்றும்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இந்தியா, உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கும் உதவி வருவதாகக் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, நிலையான வேளாண் வளர்ச்சிக்காக, நவீன மற்றும் நீண்டகால வேளாண் முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, சீன இறக்குமதிகளுக்கு ரூபாயில் பணம் செலுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும், வெளிநாட்டுக் கடன்களையும் ரூபாயில் செலுத்துவதற்கு முயற்சி செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு முதலாமாண்டு முழு கடன் தள்ளுபடியையும், மற்ற மாவட்டங்களில், 50 சதவீத கடன் தள்ளுபடியையும் அரசு அனுமதிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.

சீனாவில் இருந்து நுகர்வோர் பொருட்கள் இல்லாமல், மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, அடுத்த 10 ஆண்டுகளுக்குள்,மொத்த உள்நாட்டு  உற்பத்தியை  3 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக, மற்ற நாடுகளுடன் அறிவையும் அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளையும் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, அதுதான் மிகவும் நியாயமான மற்றும் நிலையான உலகளாவிய ஒழுங்குக்கான ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார்.

சீனப் பொருட்கள் இறக்குமதியால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க,  கட்டாயமாகச்  சில கொள்கைகளை மாற்றவும், கடமைகளைச் செய்யவும் அவசியம் உள்ளது.  அப்போதுதான்  ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு கூறுவது போல், வல்லரசுக் கனவு காணும் இந்தியா,  தற்சார்பு நிலையை அடைந்து, பொருளாதாரத்தில் உயர்ந்து, உலக வர்த்தகக் கட்டமைப்பில் உயர்ந்து நிற்க முடியும்.

Tags: China-US trade war hampers global economy: ZOHO's Sridhar Nembu guides!Guided by ZOHO Sridhar Vembu!china vs america
Share
Tweet
SendShare
Previous Post

குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

 நாளை சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies