மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகள் : வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 22, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகள் : வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Jun 9, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகளை வீடியோவாக வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக அரசின் ஒவ்வொரு திட்டமும் ஏழை மக்களின் நலனை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியதாகக் கூறியுள்ளார்.

உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத், கிசான் சம்மன் நிதி ஆகிய திட்டங்கள் நாட்டு மக்களின் நம்பிக்கைகளுக்கு புதிய சிறகுகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,  மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் பாரதம் வளர்ச்சியையும், பொருளாதார மாற்றங்களைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாகப் பாரதம் உள்ளதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் பாரதம் உறுதியுடன் உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றபோது பொருளாதாரம் சீர்குலைந்திருந்தும், நிர்வாக அமைப்பு திசையற்றும் இருந்ததாக விமர்சித்தார். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

12வது ஆண்டு தொடக்கத்திலும் தன்னம்பிக்கை, வலிமை மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தின் எதிர்காலத்தை நோக்கி பாரதம் உறுதியுடன் பயணிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Achievements of the BJP government at the Centre in 11 years: Prime Minister Modi congratulates by releasing a videoபிரதமர் மோடி வாழ்த்து
Share
Tweet
SendShare
Previous Post

“SIR”-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Next Post

அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதுக்குழு!

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies