பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!
Sep 12, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 01:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III’ என்ற விருது பிரதமர் மோடிக்கு  வழங்கப்பட்டுள்ளது.

சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூலிட்ஸின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் மோடி அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.  விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லிமாசோலில் தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகப் பிரதமர் மோடி மாநாட்டில்   தெரிவித்தார்.

அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூல்ஸ் சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III’  விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விருதை பெற்ற பின் பேசிய பிரதமர் மோடி, இந்த விருது வழங்கிய சைப்ரஸ் அரசாங்கத்திற்கும் சைப்ரஸ் மக்களுக்கும்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் ஒரு மரியாதை என்றும் இது அவர்களின் திறன்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஒரு மரியாதை என தெரிவித்தார்.

இது நமது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் வசுதைவ குடும்பகம் என்ற சித்தாந்தத்திற்கும் ஒரு மரியாதை என்றும்  இரு  நாடுகளுக்கு இடையிலான நட்புறவுக்கு இதை அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கௌரவத்தை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.  இந்த விருது அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நமது மக்களுக்கான நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiPrime Minister Modi honored with Cyprus' highest awardGrand Cross of the Order of Makarios III' of Cyprusபிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதுகிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III
Share
Tweet
SendShare
Previous Post

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்!

Next Post

கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies