மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!
Sep 20, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் அரசு ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக மண்டலத் தலைவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியார் கட்டடங்களுக்கான வரி வசூல் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மதுரை மாநகராட்சி 3வது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலால் வரிவிதிப்பு குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 8 லட்சம் ரூபாய் வரிவிதிப்பு இருக்க கூடிய கட்டடங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரி செலுத்தினால் போதும் என்ற அளவிற்கு வரிக்குறைப்பு செய்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி விதிப்பில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வரி குறைப்பு விவகாரத்தில் சங்கிலி தொடர் விசாரணையால், அதிகாரிகள் முதல் ஆளும் கட்சியினர் வரை கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Madurai Corporation suffers loss of Rs 200 crore: 5 government employees arrestedஅரசு ஊழியர்கள் 5 பேர் கைது
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு – உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!

Next Post

கேரளா : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப் மீட்பு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies