பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
Sep 12, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!

அபிநய சரஸ்வதி… கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார்.  கதாசிரியர் சின்ன அண்ணாமலை ‘சாவித்ரி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றைத் தொடங்கினார்.

அதன் நாயகன் எம்.ஜி.ஆர். நாயகி பாத்திரத்துக்கு யாரைப் போடலாம் என பேச்சு வந்த போது “பத்மினி சரியாக இருப்பார்” என்றார் கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் படத்தின் பைனான்சியருமான ஏ.எல்.சீனிவாசன்.

ஆனால் பத்மினியின் கால்ஷீட் இல்லாததாலும் விரைவில் படத்தை முடிக்க வேண்டும் என்பதாலும் புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படி சரோஜா தேவிக்கு மேக்அப் டெஸ்ட் எடுத்தார்கள். ஆயிரம் அடிக்குப் படமாக்கப்பட்ட காட்சிகளைத் திரும்பத்திரும்ப பார்த்த எம்.ஜி.ஆர். நீண்ட யோசனைக்குப் பிறகு ஒப்புதல் கொடுத்தார்.

அந்த நேரத்தில் தமது சொந்தப்படமான ‘நாடோடி மன்னனிலும்’ கவனம் செலுத்தி வந்த எம்.ஜி.ஆர். அதற்காக மற்ற பட வேலைகளை நிறுத்திவைத்தார். இந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி ‘நாடோடி மன்னனில்’ இருந்து விலகிக் கொண்டார். அதை சரோஜா தேவியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாகப்பிரிவினை’ என அடுத்தடுத்து வெள்ளி விழா படங்களில் நடித்ததால் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார் சரோஜா தேவி. அதன் விளைவாக ஒரே நாளில் 30 படங்கள் BOOK ஆகும் அளவுக்கு வளர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ராப்பகலாக நடித்தார்.

சரோஜா தேவியின் நடிப்பாற்றலுக்கு முழு தீனி போட்ட படமாக அமைந்தது ‘பாலும் பழமும்’. அதில் ‘நர்ஸ் சாந்தியாகவே’ வாழ்ந்திருந்தார் சரோ. அந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்புக்குச் சமமாகப் பேசப்பட்டது சரோஜா தேவியின் நடிப்பு.

Tags: Legendary actress Saroja Devi passes awayநடிகை சரோஜா தேவி காலமானார்சரோஜா தேவிcinema newsNEWS TODAYபெங்களூரு
Share
Tweet
SendShare
Previous Post

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Next Post

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies