விடைபெற்றார் 'THE WALL 2.O'!
Aug 7, 2026, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருக்கிறார் இந்திய பேட்ஸ்மேன் செதேஷ்வர்ப் புஜாரா. இந்திய அணியில் இடம்பிடித்துப் புஜாரா செய்த சாதனைகளைச் சற்று திரும்பி பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த 2010ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானவர்தான் ‘THE WALL 2.O’ செதேஷ்வர்ப் புஜாரா.

2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய புஜாரா, 525 பந்துகளில் 202 ரன்கள் விளாசினார். ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 500 பந்துகளுக்கு மேல் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார்.

கடைசியாகக் கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய புஜாராவுக்கு, அதன் பின்னர் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை….

103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 19 சதங்கள், 35 அரைசதங்கள் உடன் 7,195 ரன்கள் குவித்தவர். டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 217 பந்துகளை எதிர்கொண்டுள்ளபுஜாராவின் பேட்டிங் சராசரி 43.61. இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற பெருமையையும் இவரிடம் உள்ளது.

ஆஸ்திரேலியா என்றாலே அடிப்பேன் என்று சொல்லும் அளவுக்கு அந்த அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியவர்புஜாரா… ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 11 அரைசதங்கள் என 2 ஆயிரத்து 74 ரன்களை விளாசியிருக்கிறார்.

தடுப்புமுறை ஆட்டத்திற்குப் பெயர் போன புஜாரா, இக்கட்டான சூழலில் அணியின் மீட்பராக விளையாடும் திறன் படைத்தவர். களத்தில் எதிரணி பவுலர்கள் சிறப்பாக வீசும் பந்தை அறிந்து அதை அப்படியே லீவ் செய்யும் கலையில் கைதேர்ந்தவர்.

முதல் தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களைக் கடந்துள்ள புஜாரா, 18 இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார். புஜாராவின் இந்தச் சாதனையை இந்திய கிரிக்கெட்டில் யாராவது முறியடிக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது.

ஓய்வு அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புஜாரா, இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு,தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு முறைக் களம்காணும் போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்று கூறிய அவர், அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.

Tags: indian cricket teamசர்வதேச கிரிக்கெட் போட்டி'THE WALL 2.O' bids farewellஇந்திய பேட்ஸ்மேன் செதேஷ்வர்ப் புஜாராTHE WALL 2.O
Share
Tweet
SendShare
Previous Post

அதிகரிக்கும் அரசியல் தலையீடு -டிஜிபி நியமனத்தில் குளறுபடி!

Next Post

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies