என்விடியா சம்பவத்தால் அம்பலமான சீனாவின் முகம் : எதிரி நாடுகளை முடக்க சீனாவின் கீழ்த்தரமான தந்திரம் - சிறப்பு கட்டுரை!
Nov 13, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்விடியா சம்பவத்தால் அம்பலமான சீனாவின் முகம் : எதிரி நாடுகளை முடக்க சீனாவின் கீழ்த்தரமான தந்திரம் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 11, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது உளவு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம், உலகளவில் தனது செல்வாக்கை நிலைநாட்டவும், தொழில்நுட்ப மற்றும் வளர்ச்சிப் போட்டியில் முந்திக்கொள்ளவும் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களைத் திருடுவதற்கு சீனாவின் ‘ஹனி டிராப்’ உளவு உத்திகளை எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்தியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சி மாக் (Chi Mak ) என்ற சீன விண்வெளி பொறியாளர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களின் அமைதியான உந்துவிசை தொழில்நுட்பம் (Quiet submarine propulsion technology) உள்ளிட்ட பல பாதுகாப்பு ரகசியங்களை நகலெடுத்து தனது குடும்பத்தினர் மூலம் சீனாவிற்கு அனுப்ப வைத்த குற்றச்சாட்டில் 2005-ல் கைது செய்யப் பட்டார்.

இதே போல் சீனாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் துறை தொழிலதிபரான சூ பின் (Su Bin), மீது போயிங் சி-17 Globemaster இராணுவப் போக்குவரத்து விமானம், F-22 மற்றும் F-35 போர் விமானங்கள் போன்ற அமெரிக்காவின் அதிநவீன இராணுவ விமானங்களின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்புத் திட்டங்களைச் சீன ராணுவ அதிகாரிகளுக்குக் கடத்த உதவியதற்காக தண்டனை வழங்கப் பட்டது.

அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஹவாயில் உள்ள அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தில் (US Pacific Command) பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பெஞ்சமின் பியர்ஸ் பிஷப் (Benjamin Pierce Bishop) 2011-ல் ஹவாயில் நடந்த ராணுவ மாநாடு ஒன்றில், தன்னைவிட 32 வயது இளையவரான 27 வயது சீன மாணவியின் காதல் வலையில் சிக்கினார்.

இந்த வரிசையில் என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜென்சன் ஹுவாங்கை’ ஹனி டிராப்’ செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

AI தொழில்நுட்பப் புரட்சியில் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க, முந்தைய ஜோ பைடன் அரசு செமிகண்டக்டர் ஏற்றுமதி மீது விரிவான கட்டுப்பாடுகளை 2022-ல் விதித்தது. ஆனால், இந்தச் சூழலைச் சமாளிக்க சீனாவுக்கு வெறும் ஐந்து மாதங்களே தேவைப்பட்டன.

சீனாவைச் சேர்ந்த ‘7 Road Holdings Ltd’ என்ற பிரபல ஆன்லைன் கேமிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் துணை அமைப்பாக 2015-ல் சிங்கப்பூரில் ‘7 Road International’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

2023- மார்ச்சில் இந்த நிறுவனம் கேமிங் துறையிலிருந்து AI மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைக்கான தரவு மையமாக மாற்றப்பட்டு, Megaspeed International என பெயர் மாற்றப்பட்டது.

சீன அரசு ஊடகத்தில் தொலைக்காட்சி செய்தியாளராகவும், பின்னர் தனியார் வங்கியாளராகவும் பணியாற்றிய சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆலிஸ் ஹுவாங்கின் பேரில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் உள்ள ‘ஹுவாங் லே லிமிடெட்’ (Huang Le Limited) என்ற நிறுவனத்துக்கு மெகாஸ்பீட் பங்குகள் மாற்றப்பட்டு மெகாஸ்பீட் நிர்வாக இயக்குநராகவும் முக்கிய தலைவராகவும் ஆலிஸ் ஹுவாங்க் செயல்பட்டு வந்தார்.

பிறகு 2023-ல் நவம்பரில் ஆலிஸ் ஹுவாங்கிடமிருந்து மெகாஸ்பீட் நிறுவனத்தின் முழு உரிமையையும் தனது ‘ஸ்விஃப்டேட்டா’ (Swiftdata) என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கிய டான் யோங் பாங் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார்.

இதன் பிறகு வெறும் நான்கு நாட்களில் மெகாஸ்பீட் ஒரு அதிகாரப்பூர்வ ‘என்விடியா கிளவுட் பார்ட்னராக’ நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024 முதல் 2026 வரை சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள என்விடியா நிறுவனத்தின் அதிநவீன சிப்புகள், சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் மற்றும் அதன் மலேசிய துணை நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது, அந்நிறுவனம் கைவசம் வைத்திருந்த பணத்தை விட ஆயிரம் மடங்குக்கும் அதிகமாகும்.

ஆலிஸ் மீதான கண்காணிப்பு, அவர் என்விடியாவின் CEO ஜென்சன் ஹுவாங்கை வளைப்பதற்காக சீனாவின் முதன்மை உளவு நிறுவனமான மாநிலப் பாதுகாப்பு அமைச்சகத்தால் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்பதை அமெரிக்க உளவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சிப் கடத்தல் விசாரணையின் போது, என்விடியா நிறுவனத்தின் CEO ஜென்சன் ஹுவாங்க்கும், மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஆலிஸ் ஹுவாங்க்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை முடக்க அமெரிக்கா நடத்தும் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரம் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

சீனாவின் இலக்கில் அமெரிக்கா மட்டுமில்லை இந்தியாவும் இருக்கிறது. சமீபத்தில் வங்கதேச நாளிதழான ‘ப்ரோதோம் அலோ’வின் புலனாய்வு செய்திகள் இந்தியாவைக் களங்கப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியா பற்றிய ஒரு தவறான பொய் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுப் பரப்ப சீன வீ-லாக்கர்களின் ஒரு படையை டாக்காவில் உள்ள சேரிகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி அனுப்பி வைத்துள்ளது.

இந்த சீன வீ-லாக்கர்கள் டெல்லியில் இருந்து நேரலை செய்வதாக பொய் சொல்லி டூயின் மற்றும் வீசாட் போன்ற சீனத் தளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு இந்தியாவின் அவலநிலையையும் அழுக்கையும் நேரலையாக ஒளிபரப்பி வருகின்றனர்.

என்விடியா CEO ஹனி ட்ராப் மற்றும் வங்கதேசத்தில் சீன VLOGGERS இந்தியாவுக்கு எதிராக செய்த பொய் பிரச்சாரம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சீனாவைப் பொறுத்தவரை, இது போட்டியைச் சமாளிப்பதற்கான ஒரு வழக்கமான செயல்முறையாகும். மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது கைவசம் உள்ள அத்தனை கீழ்த்தரமான தந்திரங்களையும் கட்டவிழ்த்துவிடத் தயங்குவதில்லை.

Tags: espionage tacticscaliforniaChinese Communist Party employsAmerican secrets.Chi MakChinese aerospace engineedefense contractorU.S. submarines
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவில் இயங்கும் ஈரானின் ரகசிய எண்ணெய் கிடங்குகள் : அம்பலப்படுத்திய கடிதம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 3 வீரர்கள் காயம்

Related News

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் – இபிஎஸ் பேட்டி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை – நவ.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

இந்தியா வர வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies