சீனாவில் இயங்கும் ஈரானின் ரகசிய எண்ணெய் கிடங்குகள் : அம்பலப்படுத்திய கடிதம் - சிறப்பு தொகுப்பு!
Nov 13, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் இயங்கும் ஈரானின் ரகசிய எண்ணெய் கிடங்குகள் : அம்பலப்படுத்திய கடிதம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 11, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, தங்களின் கச்சா எண்ணெயைச் சீனாவுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், சீனாவில் உள்ள பல முக்கிய எண்ணெய் முனையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை ஈரான் ரகசியமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக அமெரிக்காவின் இந்தக் கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக, தனது கச்சா எண்ணெயைச் சர்வதேச சந்தையில் விற்க முடியாத நிலையில் ஈரான் உள்ளது.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஈரான் இன்டர்நேஷனல் ஊடகம் வெளியிட்ட ஆவணம் ஒன்றில், ஈரானின் எண்ணெய் அமைச்சரின் சிறப்பு உதவியாளரான முகமது ஜாவத் பவந்த், 2 பில்லியன் டாலர் கடன்பட்டிருந்த எண்ணெய் இடைத்தரகரான முகமது ஹாடி மொமெனினிடம், கொமெனியின் முன்னாள் உதவியாளர் ஹொசைன் ஷம்கானிக்குச் சொந்தமான கப்பலைப் பயன்படுத்தி சீனத் துறைமுகங்களில் ஒன்றில் எண்ணெயைச் சேமித்து வைக்குமாறு கூறியதை வெளிப்படுத்தி இருந்தது.

ஈரானின் எண்ணெயைச் சேமித்து வைப்பதன் மூலமும் சீனா வருவாய் ஈட்டுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 25 மில்லியன் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெய் சீனாவில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் தேங்கிக் கிடப்பதாகவும், அதற்காக ஈரான் 450 மில்லியன் டாலரை சேமிப்புக் கட்டணமாகச் செலுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025-ஆம் ஆண்டில் ஈரானின் கப்பல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் 80%-க்கும் அதிகமான பங்களிப்பை சீனா கொண்டிருந்தது; இது ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் 1.4 மில்லியன் பேரல்கள் ஆகும்.

இந்நிலையில் தங்களின் நிழல் கடற்படைக் கப்பல்கள் மூலம் தடைகளை மீறி சீனாவிற்கு நேரடியாக எண்ணெயைக் கொண்டு சேர்க்கவும் அங்குள்ள தங்களின் சொந்தக் கிடங்குகளிலேயே பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும் அதன் பின்னர் சர்வதேச சந்தையில் விற்கவும், சீனாவுடன் இணைந்து ரகசிய வழியை ஈரான் உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும். தற்போதைய தற்காலிக எண்ணெய் அமைச்சருமான ஹமீத் போவார்ட் எழுதிய கடிதத்தின் மூலம் இந்த ரகசிய தகவலை ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணம், அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமெனிக்கு, உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் முன்னாள் செயலாளரான அலி ஷம்கானி அனுப்பிய மிகவும் ரகசியமான கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் போவார்ட், முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசியின் நிர்வாகம் புதிய கப்பல்களைப் பயன்படுத்தும் கொள்கையை விமர்சித்துள்ளார். மேலும், அதிபர் பெஷெஷ்கியனின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு, சீனாவின் மறைமுக ஒத்துழைப்புடன் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

போவார்ட்டின் தகவலின்படி ஈரானின் அதிகாரிகள், நம்பகமான எண்ணெய் இடைத்தரகர்களுக்கு, குறிப்பிட்ட துறைமுகங்களில் நங்கூரமிடக்கூடிய, தடைசெய்யப்பட்ட கப்பல்களைத் தொடர்ந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டதாக தெரியவந்துள்ளது.

தடைசெய்யப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய்க்கான ஒரு மையத்தை நிறுவும் வகையில், துறைமுக வசதிகள் மற்றும் எண்ணெய் முனையங்களைக் கையகப்படுத்துவதற்காக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் போவார்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கச்சா எண்ணெயை சீன சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக சீனாவின் பல இடங்களில் உள்ள பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளுக்கான நீண்ட கால குத்தகைகளையும் ஈரான் பெற்றுள்ளதாக போவார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடு, ஹொசைன் ஷம்கானியின் தொடர்புடைய 51 கப்பல்கள் மீது அமெரிக்க கருவூலம் தடைகளை விதித்துள்ள நிலையில் அதன் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஷம்கானி மற்றும் கொமெனி இருவரும் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி முதல் நாள் போரிலே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கக் கண்காணிப்பில் இருக்கும் தங்களின் எண்ணெய் டாங்கர் கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க, சீனாவில் 7 பெரிய எண்ணெய் சேமிப்பு டாங்குகளை ஈரான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது

தாலியன் (Dalian), ஹுய்ஜோ (Huizhou), டோங்யிங் (Dongying) மற்றும் வெய்ஃபாங் (Weifang) ஆகிய கடலோர நகரங்களில் நான்கும். மீதமுள்ள 3 சேமிப்புக் கிடங்குகள் நிங்போ-ஜோஷன் தீவுக்கூட்டப் பகுதியில் ஈரானின் எண்ணெய் அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் நிங்போ-ஜோஷன் (Ningbo-Zhoushan) வர்த்தக மண்டலத்தில் உள்ள முக்கிய எண்ணெய் முனையத்தின் கட்டுப்பாட்டை பெற்றுள்ள ஈரான், ‘கிங்டாவ்’ (Qingdao) மற்றும் ‘பான்ட்’ (Pant) ஆகிய இடங்களில் உள்ள சிறிய கப்பல் தளங்களின் பங்குகளையும் வாங்கியுள்ளது.

இந்தத் தளங்கள் நேரடியாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் பைப்லைன்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பிற கப்பல்களுக்கு எண்ணெயை மாற்றாமல் நேரடியாகச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரகசியக் கடிதம் முழுவதிலும், அலி ஷம்கானியை விமர்சிக்கும் போவார்ட், ஈரானின் எண்ணெய் விற்பனையை விட, தனது மகனின் எண்ணெய் வணிக நலன்களைப் பாதுகாப்பதிலேயே அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: china oil storagechinaIran-US warus iran war liveus iran war 2026iran us war newsus iran wariran us war news todayus iran war newsU.S. economic sanctionsoil terminals and storage facilities in China
Share
Tweet
SendShare
Previous Post

லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக விசாரணை : குடியரசுத் தலைவருக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கடிதம்!

Next Post

என்விடியா சம்பவத்தால் அம்பலமான சீனாவின் முகம் : எதிரி நாடுகளை முடக்க சீனாவின் கீழ்த்தரமான தந்திரம் – சிறப்பு கட்டுரை!

Related News

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் – இபிஎஸ் பேட்டி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை – நவ.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

இந்தியா வர வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies