கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!
Oct 17, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் ரயில்நிலையமான கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் இந்த ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியின் இந்த ரயில் நிலையத்தை இருமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதோடு, பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வாகன நிறுத்துமிடங்களும் இல்லை என்பதால் ரயில் நிலையம் செல்வோர் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ரயில்நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் பெருகெடுத்து ஓடுவதால் பயணிகளுக்குச் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் படி கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இதுவரை மூன்று முறை ஆய்வு செய்து சென்ற நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவலநிலையிலேயே காட்சியளிக்கிறது. இந்த ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதாலே, அதனைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையமாக மட்டுமல்லாமல், தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் மையமாக இருக்கும் இந்தக் குழித்துறை மேற்கு ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தமிழகம்Passengers are suffering due to lack of basic facilities at Kanyakumari Kujithurai West railway stationகன்னியாகுமரி குழித்துறை
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies