பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Sep 13, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும், HEADSET – க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்…. ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பின் போது, ஹெட்செட் மாட்ட முடியாமல், ஷெபாஷ் ஷெரீப் தவித்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டுமா மீண்டுமா என ஷெபாஷ் ஷெரீப்பே கேட்கும் அளவுக்கு ஹெட்செட் பிரச்னை தொடர்ந்து அவருக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது. பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!

சீனாவின் சியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நட்புறவு பாராட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர், ஷெபாஷ் ஷெரீப்புடன் பெயரளவுக்கு மட்டுமே உரையாடியதால், அவர் முகம் வெளிறி காணப்பட்டார்.

உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், ஷெபாஷ் ஷெரீப்புக்கு வழங்கப்படவில்லை எனப் பாகிஸ்தான் மக்களாலேயே வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினோ எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடிக்கே முக்கியத்துவம் வழங்க, ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆனால், ஷெபாஷ் ஷெரீப்புக்கு அதிபர் புதினை பார்த்தால் என்ன தான் பதற்றம் வருமோ தெரியவில்லை… வழக்கம் போல EAR HEADSET -ஐ பொருத்துவதற்குத் தடுமாற தொடங்கினார். HEADSET-ஐ காதில் மாட்ட ஷெபாஷ் ஷெரீப் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, இவர் என்ன பண்ணுகிறார் எனப் புன்முறுவலுடன் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அதிபர்ப் புதின்.

பேச்சுவார்த்தை நடத்த வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனையா என ஷெபாஷ் ஷெரீப் நினைக்க, ஒரு கட்டத்தில் ஹெட்செட் எப்படி மாட்ட வேண்டும் எனக் கிளாஸ் எடுக்கத் தொடங்கினார் அதிபர் புதின்.

ஷெபாஷ் ஷெரீப் ஹெட்செட் உடன் மல்லுக்கட்டுவது இது முதல் முறையல்ல. உஸ்பெஸ்கிஸ்தான் மாநாட்டின் போதும் இதே காமெடியைத் தான் அரங்கேற்றினார்.  அப்போதும் எதிரில் இருந்தவர் ரஷ்ய அதிபர் புதின் தான்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பின் இந்தச் செயல் அவரது சொந்த நாட்டிலேயே கேலிக்குள்ளாகி உள்ளது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் நாட்டைப் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவமானப்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் வசைபாடிக் கொண்டிருக்க, அதிபர் புதினை பார்த்தால் ஷெபாஷ் ஷெரீப் பார்த்தால் நடுக்கம் வந்து விடும் போலும் என அரசியல் வல்லுநர்கள் கிண்டல் செய்துள்ளனர். 22 கோடி மக்களுக்கான தலைவரா இவர் என சொந்த நாட்டு மக்களே இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags: ரஷ்ய அதிபர் புதின்பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்சீன அதிபர் ஜி ஜின்பிங்Pak. The Prime Minister's annoying headset: Netizens are roasting him with memes!
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

Next Post

நவீன நாஜிசத்திற்கு எதிராக கூட்டணி : புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies