நவீன நாஜிசத்திற்கு எதிராக கூட்டணி : புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்!
Sep 13, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவீன நாஜிசத்திற்கு எதிராக கூட்டணி : புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய வட கொரிய வீரர்களின் தியாகத்தைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர்  கிம் ஜாங் உன்னுக்கு நன்றித் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இரண்டாம் உலகப் போரில், சீனாவிடம் ஜப்பான் சரணடைந்து முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் சீனாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

சீன இராணுவ அணிவகுப்புக்குப் பிறகு ஒரே காரில் பயணித்த ரஷ்ய அதிபர்  புதினும், வடகொரிய அதிபர்க் கிம்ஜாங் உன்னும் தனியாக சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து, உக்ரைன் இராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியை ரஷ்யா மீட்டெடுக்க உதவியதற்காகவும், நவீன நாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இணைந்ததற்காகவும் வட கொரியாவுக்கு ரஷ்ய அதிபர் நன்றித் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய வீரர்களோடு தோளோடு தோள் நின்று தங்கள் சொந்த நாட்டைப் பாதுகாப்பது போல ரஷ்யாவைப் பாதுகாத்த வட கொரிய வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.

ரஷ்யாவுக்கு உதவுவது தங்களின் சகோதர கடமை என்று புதினிடம் வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கும் அதன் மக்களும் முன்னேற முழு ஆதரவையும் வழங்க வட கொரியா தயாராக உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிம் ஜாங் உன்-னை ரஷ்யாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யாவுக்குச் சென்றிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர்  புதினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அப்போது இருநாட்டுத் தலைவர்களும், பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரு நாடுகளும் தாக்கப்பட்டால் உடனடியாக ராணுவ உதவியை வழங்க, கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்த பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் கூறுகிறது.

பனிப்போர் முடிந்ததிலிருந்து இரு நாடுகளும் செய்து கொண்ட மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக இதுவாகும். எதிர்பாராத வகையில், ரஷ்யாவின் எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் ராணுவப் படைகள், குர்ஸ்க் பகுதியைக் கைப்பற்றியது. இந்நிலையில்,ரஷ்யாவுக்கு ஆதரவாக, 15, 000க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புகளை வட கொரியா ரஷ்யாவுக்கு அனுப்பி இருந்தது.

இராணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், எந்த ஒரு மிரட்டலுக்கும் சீனா அஞ்சாது என்றும், மனிதக் குலம் போர் அல்லது அமைதி இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் வடகொரியா இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன. சீனாவும் அமெரிக்காவின் வர்த்தகப் போரை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சீனாவின் வெற்றி அணிவகுப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர்  புதின் மற்றும் வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே மேடையில் ஒன்றாக இருந்தது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Tags: ரஷ்ய அதிபர் புதின்Alliance against modern Nazism: North Korea's Kim Jong Un shakes hands with Putin!புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்வட கொரிய வீரர்
Share
Tweet
SendShare
Previous Post

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Next Post

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies