யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!
Aug 6, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 08:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் முதல் ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை அமெரிக்கா தயாரிக்கத் தொடங்கியுள்ளது. F 47 என்று பெயரிடப் பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீனப் போர் விமானம், சீனாவின் சீனாவின் J-35 மற்றும் ரஷ்யாவின் Su-57 போர் விமானத்தை விட வலிமையானது என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒரு நாட்டின் இராணுவ பலத்தின் முக்கிய அடையாளமாகப் போர் விமானங்களே உள்ளன. மேம்பட்ட அதிநவீனப் போர் விமானங்களைத் தயாரிப்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் முன்னணியில் உள்ளன.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி, அமெரிக்க விமானப்படையின் அடுத்த தலைமுறை போர் விமானமான F-47 யை உருவாக்குவதற்கான ஒரு பெரிய ஒப்பந்தத்தை   நிறுவனம் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

மேலும் இதற்கு முன்பு யாரும் பார்த்திராத ஒரு அதிநவீனப் போர் விமானமாக F-47 இருக்கும் என்றும், வேகம் முதல் சூழ்ச்சித்திறன் வரை ஒரு போர் விமானத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்டிருக்கும் என்றும், உலகில் எந்த ஒரு போர் விமானமும் இதன் அருகில் கூட வராது என்று ட்ரம்ப் அறிவித்தார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருக்கும் F-22 ஸ்டெல்த் போர் விமானத்தை மேம்பட்ட போர் விமானமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை இதுவென்று கூறப்படுகிறது. F-47 விமானத்தின் விலை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பும் வெளியிடவில்லை என்றாலும் ஒரு F-47 போர் விமானத்தின் விலை 300 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாக இதுவாகும்.

F-47 அமெரிக்காவின் புதியஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். இது அடுத்த தலைமுறை வான் ஆதிக்கம் (NGAD) திட்டத்தின் கீழ்த் தயாரிக்கப் படுகிறது. 2023 ஆம் ஆண்டில் (Northrop Grumman) நார்த்ரோப் க்ரம்மன் ஒப்பந்தக்காரராக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பிறகு, F-47 போர் விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போயிங் நிறுவனத்துக்குக் கிடைத்தது.

அமெரிக்க விமானப்படைக்காக, 185க்கும் மேற்பட்ட F-47 ரகப் போர் விமானங்களை  தயாரிக்கும் பணியைப் போயிங் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. ரேடாரின் கண்ணுக்குப் புலனாகாத தன்மை, அதிவேகம், சென்சார்கள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் தன்னாட்சி ட்ரோன்களுடன் இணைந்து பறக்கும் திறன் ஆகியவை இந்தப் போர்விமானத்தில் உள்ளன. அதிக ஆபத்துள்ள சூழல்களில் கூட லாவகமாகச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

மேம்படுத்தப்பட்ட ஸ்டெல்த் தொழில்நுட்பமே F-47 போர் விமானத்தின் சிறப்பம்சமாகும். இதன் வேகம் ஒலியை விட இரு மடங்கு அதிகமாகும். அதாவது, மணிக்கு 2,470 கிலோமீட்டர் ஆகும். சுமார் 2000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட F-47 போர் விமானத்தில் AI-இயங்கும் அமைப்புகளும் உள்ளன. இதனால், போர்ச் சுழலில், ஒரே நேரத்தில் பல ட்ரோன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் Su-57 மற்றும் சீனாவின் J-35A ஆகிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விட 70 சதவீத மேம்பட்ட வரம்பை  கொண்டதாக F-47 போர் விமானம் விளங்குகிறது.

இரண்டாம் உலகப் போரின் புகழ்பெற்ற அமெரிக்க போர் விமானமான P-47 தண்டர்போல்ட்டை நினைவு கூறும் வகையில் F-47 என்று பெயரிடப்பட்டாலும், இது, நாட்டின் 47வது அதிபர் காலத்தில் வந்தது என்பதையும் இந்தப்பெயர் சுட்டிக் காட்டுகிறது.

மிகவும் மேம்பட்ட ஆபத்தான மற்றும் தகவமைப்புத் திறன் கொண்ட போர் விமானமாக F-47 இருக்கும் என்று அமெரிக்க விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் டேவிட் ஆல்வின் தெரிவித்துள்ளார். மேலும், 2029ம் ஆண்டுக்குள் F-47 போர் விமானம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: americausaNo one can get close: America's 6th generation fighter jetF-47 அமெரிக்காவின் புதிய ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம்
Share
Tweet
SendShare
Previous Post

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Next Post

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies