பிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா? : விமர்சனங்களுக்கு பதிலடி - சட்டப் போராட்டத்தில் இறங்கிய மேக்ரான்!
Sep 13, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா? : விமர்சனங்களுக்கு பதிலடி – சட்டப் போராட்டத்தில் இறங்கிய மேக்ரான்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரான்ஸ் அதிபரின் மனைவி ஒரு திருநங்கை எனத் தொடர்ச்சியாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதனை  சட்டரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எதிர்கொள்ள அதிபர் மேக்ரான் தயாராகியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

காதலுக்கு வயது வித்தியாசமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என நிரூபித்தவர்  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். தன்னை விட 24 வயது மூத்த பெண்ணைத்தான் அவர்  காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

1993ம் ஆண்டு பிரான்ஸின் அமியன்ஸ் பகுதியில் உள்ள தனியார்  கத்தோலிக்க பள்ளியில்தான் மேக்ரானும், அவரது மனைவியான பிரிஜிட்டேவும் முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர். அப்போது மேக்ரானுக்கு வெறும் 15 வயதுதான். ஆனால், பிரிஜிட்டேவுக்கோ 39 வயதாகியிருந்தது.

மேலும், பிரிஜிட்டேவுக்கு அப்போது ஆன்றே-லூயிஸ் ஆசிரே என்பவருடன் திருமணம் நடைபெற்று, 3 குழந்தைகளும் இருந்தனர். அவரது முதல் குழந்தையின் பள்ளி தோழன்தான் இம்மானுவேல் மேக்ரான்.

இருவரும் காதல்வயப்பட்டனர். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரிஜிட்டே-வின் கணவர் 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். அதே ஆண்டு, பிரிஜிட்டேவை மேக்ரான் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னருமேகூட இருவரையும் பலர் விமர்சித்தவண்ணம்தான் இருந்தனர். இருப்பினும் அந்த விமர்சனங்களையெல்லாம் காதில் வாங்காமல் மேக்ரானும், பிரிஜிட்டேவும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்தச் சூழலில்தான், பிரிஜிட்டே ஒரு பெண்ணே இல்லை. அவர் ஒரு திருநங்கை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவை  சேர்ந்த அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான கேண்டஸ் ஓவன்ஸ் என்பவர்தான் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரிஜிட்டே பிறக்கும்போது ஒரு ஆணாகப் பிறந்ததாகவும், அவருக்கு ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ்( Jean-Michel Trogneux) எனப் பெயரிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். பின்னர், பிரிஜிட்டே பெண்ணாக மாறி மேக்ரானைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரான், வதந்திகளைப் பரப்புவதாக கூறி கேண்டஸ் ஓவன்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும், பிரிஜிட்டே உண்மையில் ஒரு பெண்தானா என, பிரான்ஸ் மக்களும் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, பிரிஜிட்டே திருநங்கை இல்லை என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மேக்ரான் உள்ளார்.

இதுகுறித்த பேட்டியளித்த அவரது தரப்பு வழக்கறிஞர், மேக்ரான் மிகவும் மனஉளைச்சலில் இருப்பதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகள் அவரது பணியைப் பாதிப்பதாக உள்ளதாகவும் கூறினார். பிரிஜிட்டே கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளதா? எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அந்தப் புகைப்படங்கள் உள்ளதாகவும், அவை நீதிமன்றத்திடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் தனது கூற்றில் கேண்டஸ் ஓவன்ஸ் உறுதியாக உள்ளார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகு யார்  கூறுவது உண்மை என்பது தெரிய வரும்.

Tags: Is the French President wife transgender?: Macron responds to criticism - launches legal battleபிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா?
Share
Tweet
SendShare
Previous Post

MADE IN INDIA-க்கு வரவேற்பு : ஐ-போன் 17 மாடலை வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்!

Next Post

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies