100 கோடி கிளப்பில் இணையும் குஜராத்தி திரைப்படம் : 14,000 % லாபம் பார்த்த படக்குழு!
Aug 1, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

100 கோடி கிளப்பில் இணையும் குஜராத்தி திரைப்படம் : 14,000 % லாபம் பார்த்த படக்குழு!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தி மொழி திரைப்படமான “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடுகிறது. போட்ட பணத்தை விட 14 ஆயிரம் சதவீதம் லாபம் பார்த்திருக்கிறது. அலசலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்றாலே பாலிவுட், கோலிவுட், டோலிவுட் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு என நட்சத்திர பட்டாளங்கள் இங்கு அதிகம்.

இவர்களின் படங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுத்தும் டிக்கெட் வாங்க தயாராக இருப்பார்கள். இப்படி, மூன்று திரையுலகம் மட்டுமே கொடி கட்டி பறந்த நிலையில், கேஜிஎப் திரைப்படம்மூலம் அந்தப் பட்டியலில் இணைந்தது கன்னட திரையுலகமான SANDALWOOD.

தரமான படம் கொடுத்தால் போதும், எந்த மொழியாக இருந்தாலும் PAN INDIA ஹிட் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக மாறியது ராக்கி பாயின் KGF. இந்த வழியை பின்பற்றிக் குஜராத்தி மொழி திரைப்படமான “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” . தற்போது பாக்ஸ் ஆபிஸில் கால் தடம் பதித்திருக்கிறது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எல்லாம் இந்தப் படம் வெளியாகவில்லை.

50 லட்சம் ரூபாய் மட்டுமே பட்ஜெட். இயக்குனர் Ankit Sakhiya மட்டுமே படத்திற்கு அடையாளம். தமிழ் சினிமாவிலேயே சிறுபடங்களுக்கு அவ்வளவாக ஆதரவு கிடைப்பதில்லை எனும்போது, குஜராத்தியில் சொல்லவா வேண்டும். ஆரம்பத்தில் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை.

முதல் வாரத்தில் 26 லட்சம், இரண்டாவது 29 லட்சம், மூன்றாவது வாரத்தில் 43 லட்சம் மட்டுமே கலெக்சன். நான்காவது வாரத்தில் இருந்து தான் “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” படத்துக்கு ஜாக்பாட் அடிக்கத் தொடங்கியது. படக்குழுவே ஆச்சரியப்பட்டுப் போகும் அளவுக்கு 10 கோடி வசூல்.

5-வது வாரத்தில் 25 கோடி, 6-வது வாரத்தில் 25 கோடி எனக் கலெக்ஷன் கூடிக்கொண்டே போக, குஜராத்தி மொழி திரைப்படத்திற்கு PAN INDIA அளவில் கவனம் கிடைத்துள்ளது.

குஜராத்தி மொழியில் ஏற்கனவே சாதனை படைத்த சால் ஜீவி லய்யே படத்தின் 50 கோடி வசூலை, “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” அசால்டாக முறியடித்துள்ளது. விரைவில் 100 கோடி அடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அம்மாநில திரையுலகத்தினரும் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

Tags: லாலோ கிருஷ்ணா சதா சகாயதேcinema newstoday cinemaGujarati film joins 100 crore club: Film crew sees 14000% profit!குஜராத்தி திரைப்படம்
ShareTweetSendShare
Previous Post

நம்பர் 1 மகிழ்ச்சி நாட்டின் சோகம் : வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தால் தவிப்பு!

Next Post

10,000 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பலை கக்கும் எரிமலை : தூக்கத்தில் இருந்து முழித்த ஹெய்லி குப்லி!

Related News

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் ரூ.5000 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies