காசி - தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி : தமிழ் கற்க வருகை தந்த வடமாநில மாணவர்கள்!
Sep 12, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

காசி – தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி : தமிழ் கற்க வருகை தந்த வடமாநில மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி தமிழ் சங்கமத்தின் வாயிலாகத் தமிழ் கற்பதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தமிழ்நாட்டுக்கும்  காசிக்கும் இடையில் பல்லாயிரம் ஆண்டுப் பிணைப்பு உள்ளது. கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ரீதியிலான இந்தப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதன் 4.0 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், வடமாநில மாணவ மாணவிகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் நோக்கில், “தமிழ் கற்கலாம்” என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 நாட்கள் கல்விச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்து வடமாநில மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்படவுள்ளன. அத்துடன், தமிழகத்தின் தொன்மைவாய்ந்த கலைகள் குறித்தும், சிறப்புமிக்க கோயில்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.

இந்த “தமிழ் கற்கலாம்” சுற்றுலா டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து 300 மாணவ மாணவிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்  துணைத் தலைவர் சுதா சேசைய்யன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி, கலாச்சாரம் தொடங்கி உணவு முறைகள் வரை நேரடியாக அறிந்துகொள்ள மாணவர்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், உத்தரபிரதேசத்தில் இருந்து வருகை தந்துள்ள மாணவர்களும் தமிழ் பண்பாட்டை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கிய இடங்களை பார்வையிட ஆவலுடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் கற்கலாம்” என்ற இந்த சுற்றுலா ராமேஸ்வரம் பகுதியில் நிறைவுப்பெறவுள்ளது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழ்காசி தமிழ் சங்கமம்Kashi - A new initiative of Tamil Sangam: Northern State students who came to learn Tamilகாசி - தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சிவடமாநில மாணவர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

இந்துக்களுக்கு எதிரான வன்முறை : பாக்.கின் பகடை காயாக மாறிய வங்கதேசம்!

Next Post

வங்கதேச அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய ஒஸ்மான் ஹாதி கொலை : தேர்தலுக்கு முன் நேரடி அரசியல் லாபம் யாருக்கு?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies