போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பரப்புரையின் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, காவல்துறை மீதான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் வழங்கியதாக தெரிவித்தார்.
தேயிலைத் தோட்டத்தில் வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் கூட வழங்கப்படுவதில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறினார், “தற்போது பள்ளி வளாகம் முன் போதைப்பொருள் விற்கப்படுகிறது; ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
“தமிழகத்தில் கொலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக நயினார் குறிப்பிட்டார்.
















