அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ! ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்விபிரதமர் மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவர் குறித்து பொது மேடையில் மலிவாக பேசுவதும், அதனை மேடையில் இருப்போரும், சுற்றி இருப்போரும் கைத்தட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளின் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் குறித்து தகாத வாரத்தையில் பேசுவதில் தொடங்கி பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுப்பது வரை தொடர்ந்து அரசியல் மாண்பின் எல்லையை மீறி நடந்து கொள்ளும் திமுகவின் கீழ்த்தரமான போக்கை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமரை இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே போற்றும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொச்சையாகத் தூற்றும் அறிவாலயம்
மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















