விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? - உன்னிப்பாக கவனிக்கும் உலகம்
Aug 5, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

Manikandan by Manikandan
Apr 12, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை நோக்கித் தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கிய ஆர்டெமிஸ் 2 விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது, எந்தவொரு விண்வெளிப் பயணத்திலும் இல்லாத அளவுக்கு ஆபத்தைச் சமாளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அப்போலோ 17 திட்டத்துக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா திட்டமிட்டது. ‘ஆர்டெமிஸ் 2’ விண்கலத்தை நிலவுக்கு நாசா அனுப்பி உள்ளது.

இது வெறும் நிலவில் தரையிறங்கும் திட்டமல்ல. நிலவைச் சுற்றி விட்டு பத்து நாட்களில் பூமிக்குத் திரும்பும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாகும். இது வருங்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு இந்த ஆர்டெமிஸ்-2 விண்கலப் பயணம் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்படுகிறது.

சுமார் 23 லட்சம் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தச் சவாலான பயணத்தில், நிலவின் மறுபக்கத்துக்குச் சென்று அங்கிருந்து பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் திரும்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2028-ல் நாசா திட்டமிடப்பட்டுள்ள நிலவின் தெற்குத் துருவத்தில் ஒரு நிரந்தரத் தளத்தைத் திறக்கும் ஆர்டெமிஸ் 3 திட்டத்துக்கு ஆர்டெமிஸ் 2 திட்டமே முதல் படியாகும்.

புவியின் தாழ் சுற்றுப்பாதையிலிருந்து திரும்பும் திட்டங்களைப் போலல்லாமல், ஓரியன் விண்கலம் சந்திரனின் தூரத்திலிருந்து திரும்புவதால் இவ்வளவு முக்கியமான இந்த திட்டத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவதே இதில் உள்ள அதிவேகம்தான்.

அதாவது, மணிக்கு சுமார் 40,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தை இந்த விண்கலம் வந்து தாக்கும். இந்த அதீத வேகத்துடன், ஓரியன் விண்கலம் பூமியின் அடர்த்தியான வளிமண்டலத்தின் வழியே பசிபிக் பெருங்கடலில் விழுவதற்காக பாயும் போது, அதிக வெப்பத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. விண்கலத்தின் முன்னால் உள்ள காற்று வேகமாக அழுத்தப்படுவதால், வெப்பநிலை கிட்டத்தட்ட 2,800 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இந்த வெப்பம் முதன்மையாக உராய்வினால் அல்ல அழுத்தத்தினால் உண்டாகும்.

இதனால் விண்கலன் முழுவதும் ஒரு தீப்பிழம்பு போன்ற அதிக வெப்பம் கொண்ட பிளாஸ்மாவை உருவாக்கும் இதைத் தாங்குவதற்காகவே, ஓரியன் விண்கலத்தில் ஒரு மேம்பட்ட வெப்பக் கவசம் உள்ளது.

இந்த கவசமே படிப்படியாக எரிந்து, அதிகப்படியான வெப்பத்தைத் தானே எடுத்துக் கொண்டு உள்ளே இருக்கும் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கிறது.

மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழையும் நேரத்தில் தகவல் தொடர்பு இழப்பு ஏற்படும் என்றும் அதை இருண்ட காலம் என்றும் அதிக வேகத்தில் பூமிக்குள் திரும்பும் ஆர்டெமிஸ் 2 மிகத் துல்லியமான கோணத்தில் நுழைய வேண்டும் என்றும் அது மிகவும் ஆபத்தானது நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.

மிகவும் செங்குத்தாக இருந்தால், வெப்பத்தால் ஆர்டெமிஸ் 2 எரிந்தே அழித்துவிடும் என்றும்,தாழ்வாக இருந்தால் வளிமண்டலத்திலிருந்து விண்கலம் விலகி மீண்டும் விண்வெளியில் தூக்கி வீசப் படும்.

இந்த மரண மண்டலத்தை வெற்றிகரமாக தாண்டி ஆர்டெமிஸ் 2 பூமிக்குத் திரும்பினால் விண்வெளிப் பயணங்களிலிருந்து மனிதர்கள் பாதுகாப்பாகத் திரும்ப முடியும் என்பதை நாசா நிரூபிக்கும்.

ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் அனைத்து உயிர் காக்கும் அமைப்புகளும் சீராகச் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகளும் உலகம் முழுவதுமுள்ள விண்வெளி ஆய்வாளர்களும் பசிபிக் பெருங்கடலில் பத்திரமாகத் தரையிறங்கும் வரை ஆர்டெமிஸ் 2 வை கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆர்டெமிஸ் 2 -ன் வெற்றி மனிதர்கள் நிலவில் தங்கிச் செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகளைச் சாத்தியமாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: Human SpaceflightLunar Gateway FutureSpace TechnologyArtemis 3 MissionPacific Ocean SplashdownMoon South Pole BaseArtemis 2 MissionAstronaut SafetyLunar Orbit MissionMars Mission FutureApollo 17 LegacyArtemis ProgramNASAReentry Heat ShieldSpace explorationSpacecraft ReentryOrion SpacecraftPlasma Heat 2800CMoon MissionDeep Space Travel
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

Next Post

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies