இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சாப்பிடச் சென்றுள்ளார். அவர் உணவகத்திற்குள் இருந்த நேரத்தில், வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த ஜேம்ஸ் வசந்தன், தனது காரின் கண்ணாடி உடைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து, இது தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை என சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
















