வங்கதேச ஊடுருவல்காரர்கள் நாடு கடத்தப்படுவது உறுதி என மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில், வங்கதேச ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்குவங்கத்தில் கைதாகும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் இனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் நேரடியாக எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
‘கண்டறி, நீக்கு, வெளியேற்று’ என்ற விரிவான திட்டத்தின் கீழ் இந்த நேரடி நாடு கடத்தல் முறை நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கூறினார்.
















