கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா - முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!
Jun 12, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2026, 06:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கோப்பை தொடர், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் உற்சாகமாக ஆரம்பமானது.

மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழா, மெக்சிகோ சிட்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்டெகா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்த நிலையில், உலகக்கோப்பை வரலாறு, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கலாச்சாரம் மற்றும் கால்பந்தின் பெருமையை எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தொடக்க விழாவில் உலகப் புகழ்பெற்ற பாடகர்கள் ஷகீரா, பர்னா பாய் உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் வாயிலாக நிகழ்ச்சியை நேரலையில் கண்டு ரசித்தனர். 48 அணிகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழா அடுத்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூன்று நாடுகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி வெற்றியுடன் தனது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கியது.

FIFA உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்ட மெக்சிகோ அணி, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் உற்சாக ஆதரவுடன் களமிறங்கியது.

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ வீரர்கள், ATTACKING GAME PLAY-வை கையாண்டனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்சிகோவின் ஜூலியன் கினோனெஸ் 9-வது நிமிடத்திலும், ரவுல் ஜிமெனெஸ் 67-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

அதன் பலனாக 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மெக்சிகோ அணி, உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியிலேயே முக்கியமான 3 புள்ளிகளைப் பெற்ற மெக்சிகோ அணி, தனது ரசிகர்களுக்கு உற்சாகமான தொடக்கத்தை வழங்கியுள்ளது.

Tags: fifa world cup 2026 matchesfifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsfifa world cup finalfootball world cupfifa world cup2026 FIFA World Cup:fifa world cup goalsfootball world cup 2026world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 live
ShareTweetSendShare
Previous Post

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

Next Post

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

Related News

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies