திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேற்குவங்க ஆளுநர் ஆர் என் ரவி குடும்பத்தாருடன் வருகை தந்தார். அதனைதொடர்ந்து விஐபி தரிசனம் மூலமாக சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
சுவாமி தரிசனத்திற்கு பின், கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
















