அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவி ஆசை காரணமாக சில எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.முதலமைச்சர் விஜய் இரவல் வாங்கி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும், தவெக ஆட்சி 2 கால் நாற்காலி போல தடுமாறி வருவதாகவும் இபிஎஸ் விமர்சித்தார்.
















