51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் - சிறப்பு தொகுப்பு!
Jul 25, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட விக்ரம்-1 ராக்கெட், நாட்டின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, புவி சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் பின்னால் உள்ள இஸ்ரோ முன்னாள் என்ஜினீயர்கள் குறித்து விரிவாக
பார்க்கலாம்…

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கிய பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பாரத் டாகா ஆகியோரின் பல ஆண்டுகால கனவும், கடின உழைப்பும்தான் இன்று இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் மைல்கல்லாக மாறியுள்ளது.

இந்த வெற்றியின் பின்னால் இருக்கும் பவன் குமார் சந்தனாவின் வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.

பள்ளியில் படித்தபோது கணிதப் பாடத்தில் வெறும் 51 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த சராசரி மாணவர்தான் பவன் குமார். அந்த மதிப்பெண் அவரது கனவுக்கு தடையாக இருக்கவில்லை. மதிப்பெண்களை விட ஆர்வம் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில், கடின உழைப்பால் ஐஐடி காரக்பூரில் இடம்பிடித்தார். அங்கிருந்து வளாகத் தேர்வு மூலம் இஸ்ரோவில் இணைந்தார்.

((GFX-IN)) திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பவன் சந்தனா, இந்தியாவின் கனரக ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். வசதியாக மத்திய அரசு வேலையைத் தொடரலாம் என்ற வாய்ப்பு இருந்தும், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு புதிய பாதையை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவரை வேறு வழியில் அழைத்துச் சென்றது.

அதேபோல, ஐஐடியில் உயர் கல்வி முடித்து, விமானவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற நாகா பாரத் டாகாவுடன் இணைந்து, 2018-ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

ஐஐடி மெட்ராஸில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் முதுநிலை பட்டம் பெற்ற நாகா பாரத் டாகா, விமான வடிவமைப்பு, செமிகண்டக்டர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் போதிய அனுபவம் வாய்ந்தவர்.

ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்துடன் பார்த்த அந்த நிறுவனம், இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது. அண்மையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் ராக்கெட் உற்பத்தி நிலையத்தையும் ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ((GFX-OUT))

2022-இல் விக்ரம்-எஸ் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஸ்கைரூட், தற்போது விக்ரம்-1 மூலம் இந்தியாவை தனியார் விண்வெளி ஏவுதள திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் முன்னேற்றியுள்ளது. இந்த வெற்றியானது, இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது.

ஒரு காலத்தில் கணிதத்தில் 51 மதிப்பெண்கள் எடுத்த மாணவர், இன்று இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு புதிய திசையைக் காட்டிய தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார்.

மதிப்பெண்கள் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால், வானம் மட்டுமல்ல, விண்வெளியும் எட்டக்கூடிய இலக்குதான் என்பதை பவன் சந்தனாவும், நாகா பாரத் டாகாவும் மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

Tags: private Indian companyNaga Bharath DakaPawan Kumar ChandanaAndhra PradeshSriharikotaVikram-1 rocketSkyroot Aerospacefirst rocket developedformer ISRO engineers
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Related News

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies