இரட்டை அர்த்த ஆபாச வசனம்,முதலமைச்சர்,நடிகை குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.
காவிரி நீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தஞ்சையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது, முதலமைச்சர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து உதயநிதி மீது தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் தவெக சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
















