திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, “HOUSE WIFE” இருக்க முடியும் என்றால் “HOUSE HUSBAND”களும் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் தம்பதியர் விவாகரத்து கோரிய வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பெண்கள் திருமணத்தை தங்கள் பணி வாய்ப்புகளுக்கு தடையாக உணர்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், அதனால் அதனை முழுவதுமாக தவிர்க்க விரும்புவதாகவும், திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கணவர்கள் வீட்டு பொறுப்பை ஏற்றால் இந்நிலைமை மாறக்கூடும் என்றும்,
“HOUSE WIFE” இருக்க முடியும் என்றால் “HOUSE HUSBAND”களும் இருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால் , திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும் என்று கருதுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்குவதாகக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
















