பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் இந்தியா உறுதியாக செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் BIMSTEC கூட்டமைப்பின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
















