வங்கதேசத்தை போன்று கலவரத்தைத் தூண்டி இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சதி செய்வதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கதேச மாணவர் போராட்டம் போல் இந்தியாவிலும் நிகழ வேண்டும் என ஐசா (AISA) மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போரா பேசியுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேஹா போராவின் பின்னணியில் ராகுல் காந்தியின் தூண்டுதல் இருப்பதாகக் கூறிய பண்டாரி, அராஜகத்தை தூண்டி நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க ராகுல் காந்தி முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.
















