சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி வடக்கு பக்கிங்காம் கால்வாயில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், மழைநீரை துரிதமாக வெளியேற்ற மூன்று தொட்டிகளுடன் கூடிய மோட்டார் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கால்வாய் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புதிதாக கட்டப்பட்டிருந்த தொட்டியுடன் கூடிய மோட்டார் அறையையும் முதலமைச்சர் பார்வையிட்டு, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
















