காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூலில், நேரு குடும்பத்தின் தவறுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூல் ‘Belonging: A Journey of Love’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
அதில், 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் தவறானது என்றும்,
இந்திரா காந்தி காலப்போக்கில் அதனை உணர்ந்ததாகவும் சோனியா குறிப்பிட்டுள்ளார்.
1984 சீக்கியர் படுகொலை இந்திய வரலாற்றின் துயரமான அத்தியாயம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வன்மம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ராணுவத்தை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதமே பாதிப்புக்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன், பிரதீப் பண்டாரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுத் தவறுகளை மூடி மறைக்கும் முயற்சியே சுயசரிதை நூல் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
சீக்கியர்கள் படுகொலை விவகாரத்தில் ராஜீவ் காந்திக்கு நற்சான்றிதழ் வழங்க சோனியா முயற்சிப்பதாகவும், போபர்ஸ் ஊழல் விவகாரம் நூலில் இடம்பெறாதது ஏன் எனவும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















