தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ராகார்க் சந்தித்து பேசினர்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
















