தர்ம சங்கடத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலால் சிதைந்த ஈரானின் OIL பொருளாதாரம்!
Jun 15, 2026, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்ம சங்கடத்தில் அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலால் சிதைந்த ஈரானின் OIL பொருளாதாரம்!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அமெரிக்காவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சி என தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர் 10 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. ஈரானில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் குவைத்தில் ஒரு சிறுமி மற்றும் நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் என நாட்டின் முக்கிய 30 எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. பற்றியெரியும் எண்ணெய் கிடங்குகளில் இருந்து தீ ஜுவாலைகள் என பதறவைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

இந்த எண்ணெய் கிடங்குகளில் இருந்து தான்பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச எண்ணெய் சந்தையை கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத கொலைகார ஆட்சியை வீழ்த்துவதில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் அற்புதமான போர்த் திறனைக் காட்டியுள்ளதாக பாராட்டியதுடன், அதற்காக இஸ்ரேலுக்கு அமெரிக்கா நன்றியுணர்வுடன் இருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார். மேலும் தங்களுக்கான ஆட்சியை ஈரான் மக்களே தேர்ந்தெடுக்கும் நாள் விரைவில் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

புதிய மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தொடங்க உள்ள ஈரான் மக்களின் வாழ்வாதார வாய்ப்பை முடக்காத வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது.

அதே நேரத்தில், ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி இருப்பது அமெரிக்காவுக்கே தர்ம சங்கடத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் நான்காவது பெரிய உற்பத்தியாளரான ஈரான் தினமும் 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இது உலக எண்ணெய் உற்பத்தியில் 20 சதவீதமாகும். ஈரானில் உற்பத்தியாகும் எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விநியோகிக்கப்படுகிறது.

போர் தொடங்கியதால் ஏற்கனவே பிரெண்டின் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 7சதவீதம் உயர்ந்து 83 டாலராக அதிகரித்துள்ளது. இன்னும் போர் நீடித்தால் இந்த விலை 150 டாலராக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே கத்தார் LNG எண்ணெய் ஆலைகளை மூடிவிட்டது. சவூதி அரேபியாவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.

இந்நிலையில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புக்களை இஸ்ரேல் தாக்கி இருப்பது சர்வதேச அளவில் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

போர் தொடங்குவதற்கு முன்னதாக, உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிக்கும் என்று ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அது ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குவதற்கு செலுத்த வேண்டிய மிகச் சிறிய விலை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இப்போது அமெரிக்காவையே திகைப்படைய வைத்துள்ளது.

Tags: oil plantsIsrael'sattackIranuswarehouses
ShareTweetSendShare
Previous Post

மேற்காசிய நிலவரம்; புதினிடம் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப்!

Next Post

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies