ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் 'ஆரஸ் செனாட்' கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 12, 2026, 09:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் நடக்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ‘பறக்கும் கிரெம்ளின்’ என அழைக்கப்படும் தனது சிறப்பு தனி விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ளார். அவருக்காக அதிநவீனப் பாதுகாப்புகாரான ‘ஆரஸ் செனாட்’ லிமோசின் காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘சக்கரங்கள் கொண்ட கோட்டை’ என்று அழைக்கப்படும் இந்த காரின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரஷ்ய அரசின் ‘கோர்டெஷ்’ திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் ‘ஆரஸ் மோட்டார்ஸ்’ மற்றும் என்ஏஎம்ஐ (NAMI) உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த ஸ்பெஷல் கார் சோவியத் காலத்து ‘ZIS-110’ லிமோசின் காரின் பிரம்மாண்டமான வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

5,630 மில்லி மீட்டர் நீளமும், 2,000 மில்லிமீட்டர் அகலமும், 1,700 மில்லிமீட்டர் உயரமும் கொண்ட இந்தக் காரில் ஹைப்ரிட் தொழில் நுட்பத்துடன் கூடிய 4.4-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

9 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையதாகும்.

வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் இருந்து முழுப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல அடுக்கு கண்ணாடிகள் மற்றும் காரின் அடியில் உள்ள தடிமனான ஸ்டீல் பிளேட்டிங் கட்டமைப்பில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஷவாயு மற்றும் ரசாயனத் தாக்குதல்களின் போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த காருக்குள் தனி காற்று அமைப்பு ரசாயன பாதுகாப்பு அமைப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

அதேபோல் பஞ்சர் ஆனாலும் தொடர்ந்து ஓடக்கூடிய சிறப்பு டயர்கள் இந்த காரில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

என்கிரிப்ட் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் காலநிலைக்கேற்ப மாறும் சொகுசு இருக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

புதினின் இந்த கார், ‘சக்கரங்கள் கொண்ட கோட்டை’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ரஷ்யாவில் விளாடிமிர் புதின் ஒரு இடத்துக்கு செல்லும்போது அவருடன் 24 கார்கள் செல்லும். ஆனால் வெளிநாட்டு பயணங்களின்போது புதின் இந்த ஒரு காரை மட்டுமே பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்தக் காரின் பொதுமக்களுக்கான மாடல் சுமார் 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், அதிபர் புதின் பயன்படுத்தும் மாடலில் அதிநவீன ராணுவத் தரத்திலான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்தக் காரின் மதிப்பு அதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: "Aurus Senat" limousinepm modi in putin carAurus Motorsputin aurus carputins carputin russia carputin carputin luxury carmodi putin carputin in modi carputin car modipm modi putin car rideputin car nameputin car collectionputin car indiaRussian president putinputin modi carRussian governmentputin car for modi"Flying Kremlinmodi putin car ride
Share
Tweet
SendShare
Previous Post

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Next Post

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies