திருப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி 11 ஆயிரத்து 463 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு, மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து 10 மாதங்களாக திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதி சரிவை சந்தித்தது.
மத்திய அரசின் முயற்சியால் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த 5 மாதங்களில் 59 கோடியே 48 லட்ச ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 11 ஆயிரத்து 463 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனவும், இது கடந்த ஆண்டின் ஏற்றுமதி அளவை விட அதிகம் எனவும் ஆடை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
















