இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவருக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள காதி ஐசன்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான இந்தத் தேர்தலில், ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. காசா போர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசின் செயல்பாடுகள் முக்கியத் தேர்தல் விவாதங்களாக உள்ளன.
எந்த அணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வாக்களர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவுகள் இஸ்ரேலின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளன.
















