இன்று, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது .
நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து உடனே செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் அமலாக்கத் துறை இறங்கியது.
விசாரணைக்காகப் புழல் சிறையில் இருந்து,செந்தில் பாலாஜியை, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
இன்றிரவே அவரிடம் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிகிறது..