கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி
Jan 26, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Aug 19, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துண்டுச் சீட்டு முதல்வர் ஸ்டாலின், மீனவ சகோதரர்களுக்காகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், முக்கடலும் சங்கமிக்கும், இலக்கியமும் ஆன்மீகமும் தழைத்தோங்கும் குமரி முனையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் கடலால் இனிதாக அமைந்தது.

மக்களைத் துன்புறுத்திய பாணாசுரன் எனும் தீயசக்தியை அழித்த பகவதி அம்மன் கோவில் கொடிமரக் கயிறு வழங்குவது மீனவர் சமுதாய சகோதரர்கள் குடும்பம்தான். ஜாதி மத பேதமற்ற ஆன்மீக பூமியிலுள்ள குமரி மக்களை, மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கிறது தீய சக்தி திமுக.

அய்யா வைகுண்டருக்கும், ஐயா நாராயண குருவுக்கும், ஞானம் கொடுத்த மண், அய்யா வைகுண்டரின் பக்தர்களால் புனிதமாகக் கருதப்படுவது இங்கிருக்கும் மருந்துவாழ்மலை. 131 ஆண்டுகளுக்கு முன், சுவாமி விவேகானந்தர் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற மண்ணில் நிற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மோடியின் முகவரி: கன்னியாகுமரி

விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மூலம் டிராக்டர் வாங்கி பலனடைந்த திரு அனந்தகோபால், 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்பெற்ற திருமதி பொன்மணி, முத்ரா கடனுதவியின் மூலம் தொழில்முனைவோரான திரு சுப்பையன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திருமதி கட்டியம்மை, பிரதம மந்திரி உயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற்றுள்ள திரு மணிகண்டன், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ள செல்வி மகாலெட்சுமி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

மீனவர் நலனுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். 1974ல் கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பேசாமல் இப்போது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஓடி வந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார் ஸ்டாலின். தமிழ் மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சரவை முக்கியமாக இருந்தது திமுகவுக்கு. இப்போது அக்கறை இருப்பது போல் நடித்தால், ஏமாற மக்கள் தயாராக இல்லை.

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மீனவர்களுக்காக புதிய துறையை உருவாக்கினார். மத்திய அரசின் மீனவ உட்கட்டமைப்பு நிதி மற்றும் மத்ஸய சம்பதா திட்டங்கள் மூலம், இதுவரை 1356 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம் 1,84,457 மீனவ சகோதரர்கள் பயனடைந்துள்ளனர்.

மீனவர் நலனுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். 1974ல் கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பேசாமல் இப்போது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கச்சத் தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஓடி வந்து ஸ்டிக்கர்… pic.twitter.com/5nWqaszbZ5

— K.Annamalai (@annamalai_k) August 18, 2023

துண்டுச் சீட்டு முதல்வர் ஸ்டாலின், மீனவ சகோதரர்களுக்காகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினாரா? கச்சத் தீவையும் மீனவ சமுதாய நலனையும் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது திமுகவுக்கு?

ஏற்கனவே தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் தலைமீது ஊழல் விசாரணைக் கத்தி தொங்குகிறது. தற்போது அவர் 4999 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார் என்று திமுக நிர்வாகியே கூறுகிறார்.

ஊழல் செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் தான் திமுக கூட்டணியின் வேலை. வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Next Post

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Related News

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக – TTV கடும் கண்டனம்!

திரூநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழந்து விபத்து – டயர் வெடித்ததால் விபரீதம்!

அமெரிக்க ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் அதிபர் டிரம்ப்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies