இமாச்சல் மழை, வெள்ள பாதிப்பு: ஜெ.பி.நட்டா ஆய்வு!
May 13, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சல் மழை, வெள்ள பாதிப்பு: ஜெ.பி.நட்டா ஆய்வு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆய்வு செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் உடனிருந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், அங்கு கனமழை பெய்து வருகிறது. இது தவிர, திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெள்ளத்தில் 2,022 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, ஒட்டுமொத்த மாநிலத்தையும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, நாளை காலை (இன்று) ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் சிம்லாவின் அன்னடேல் ஹெலிபேட் தளத்திற்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி.நட்டா, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். இயற்கை பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பை எண்ணி மிகவும் வருந்துகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து, சிர்மௌர் மாவட்டத்திலுள்ள பௌண்டா சாஹிப் சென்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஜெ.பி. நட்டா, சிர்மௌரி தால், கச்சி தாங் ஆகிய கிராமங்களுக்கும் சென்று, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், நிலச்சரிவு மற்றும் கோவில் இடிந்து விழுந்த சிம்லாவின் சம்மர் ஹில் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, சிம்லா மற்றும் பிலாஸ்பூர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விவாதித்தார்.

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

உ.பி. விடுதியில் பகீர்: 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல்!

Next Post

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஜெர்மன் தூதரகம் பாராட்டியது!

Related News

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Load More

அண்மைச் செய்திகள்

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies