இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாராட்டி உள்ளது.
ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சர் வோல்கர் விஸ்சிங், இந்தியாவின் பணம் செலுத்தும் UPI-யைப் பயன்படுத்தி காய்கறிகளுக்குப் பணம் செலுத்தினார்.
ஆகஸ்ட் 19 அன்று, பெங்களூரில் நடந்த ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தில் விஸ்சிங் கலந்துக் கொண்டார். இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் வெளியிட்டுள்ள படங்கள், வீடியோவில் ஜெர்மன் அமைச்சர், காய்கறி விற்பனையாளருக்கு பணம் செலுத்த யுபிஐ-யைப் பயன்படுத்துகிறார்.
இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் x-யில் இட்டுள்ள பதிவில் இந்தியாவின் வெற்றிக் கதைகளில் ஒன்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு. யுபிஐ ஆனது ஒவ்வொருவருக்கும் நொடிகளில் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவுகிறது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த பரிவர்த்தனை ஜெர்மனியின் மத்திய டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு ஆகும்.
இதுவரை, இலங்கை, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவைப் பயன்படுத்துகிறது.
முன்னதாக, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவைப் பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டதாக ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தனது சமீபத்திய பிரான்ஸ் பயணத்தின் போது பாரீஸ் நகரில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் தளங்கள், நாட்டில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார் என்பது குறிபிடக்தக்கது.