3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அரிய வகை நிகழ்வான நீல நிலா நாளை நிகழ உள்ளது. இந்த அரிய காட்சியைப் பொது மக்கள் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள், ஒரே ஒரு முறை மட்டுமே வருவது வழக்கம். ஆனால், அரியவகை நிகழ்வாக, ஒரே மாதத்தில் 2 முறை பௌர்ணமி தோன்றும். அப்போது, 2 -வதாக தோன்றும் நிலவு, புளூ மூன் என்றழைக்கப்படுகிறது. காரணம், அப்போது, நிலவு பிரகாசமாகவும், அளவில் முன்பைவிட பெரிய அளவிலும் காட்சி தரும். ஒரு சில நேரங்களில் புளூ நிறத்திலும் காணப்படும். இந்த காட்சியை அனைவருமே பார்க்க முடியும்.
கடந்த 2018-ம் ஆண்டு ஒரே மாத்தில் 2 புளூ முழுநிலவு தென்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு புளூ மூன் தென்பட்டு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் ஆகிய 2 மாதங்களில் 2 பௌர்ணமி வந்தது. இந்த நிலையில், இந்த மாதம் முதல் பௌணர்மி கடந்த 1-ம் தேதி வந்தது. இதேபோல, அடுத்த பௌர்ணமி நாளை வர உள்ளது.
இந்த நிலையில், நாளை 8.37 மணிக்கு தோன்றும் நிலவு வழக்கத்தைவிட மிகப்பெரிய அளவிலும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்றும், வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்து 3 ஆண்டுகள் பிறகே, புளூ மூன் தோன்றும் என தகவல் வெளியாகியுள்ளது.