இந்தியாவால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 23-ம் தேதி திட்டமிட்டபடி நிலவில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், தனது ஆய்வுப் பணிகளை தொடங்கி இருக்கிறது.
நேற்று முன்தினம் தனது நிலவுப் பாதையில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பதைக் கண்ட ரோவர், தற்போது புதிய பாதையில் பயணித்து வருகிறது. இந்தப் பாதையில்தான் நிலவில் கந்தகம் இருப்பதை ரோவர் கண்டுபிடித்திருக்கிறது.
Chandrayaan-3 Mission:
In-situ scientific experiments continue …..
Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL
— ISRO (@isro) August 29, 2023
அதோடு, இஸ்ரோ மையத்துக்கு ரோவர் ஒரு தகவல் அனுப்பி இருக்கிறது. அத்தகவலை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அத்தகவலில், “வணக்கம் பூமிவாசிகளே! இது சந்திரயான்-3-ன் பிரக்யான் ரோவர். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் சந்திரனின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். சிறந்தவை விரைவில் வரும்” என்று தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.