இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ், ஐபிஎஸ்எ உலக விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் பார்வையற்றோர் அணி தங்கப்பதக்கம் வென்றது பாராட்டுக்குரியது, இது இந்தியாவில் இருந்து பல பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று கூறினார்.
கடந்த வாரம், பிரிமிங்காவில் நடந்த உலக விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் ஆஸ்திரியாலியவை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றதன் மூலம் இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது.
இந்திய பெண்கள் பறவையற்றோர் கிரிக்கெட் அணி உலக விளையாட்டு போட்டியில் தங்களது அற்புதமான ஆட்டத்தின் மூலம் அனைவரது மனதையும் வென்றுள்ளது.
இதனை குறித்து இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ், “இவா்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இந்த அணியை ஏப்ரல் மாதத்தில் தான் உருவாக்கினோம், அதற்குள் இந்த அணி நேபாளத்துக்குச் சென்றது. இந்த போட்டியில் நம்பிக்கையை அதிகளவில் அவா்கள் வைத்திருந்தனர். நான் அவர்களை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். இது உண்மையிலேப் பாராட்டுக்குரியது மற்றும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது என்று நான் நினைக்கிறேன்.
மகளிர் பார்வையற்ற கிரிக்கெட் அணி இந்த போட்டியில் மேற்கொண்ட கடின உழைப்பை அங்கீகரிக்க இந்தியா கிரிக்கெட் அணி (பிசிசிஐ) நிதிஉதவி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த பெண்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன், ஏன்னென்றால் கிரிக்கெட்டில் பார்வையற்ற பெண்கள் அணியின் ஆரம்பம் இது. இந்த வெற்றிக்கு, பிரதமர் மோடி, குடியரசு தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் அனைவரும் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்களின் ஆதரவு எப்போதும் அவர்களை ஊக்குவிக்கும், இது பார்வையற்ற பெண்களை மட்டும் அல்ல இந்தியாவின் முழு பெண்களையும் நிச்சயம் ஊக்குவிக்கும். இந்த வெற்றி மிகவும் நேர்மறையான செய்தியை அனுப்பும் மேலும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்பை பிசிசிஐ அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 20 ஓவர்களில் 114/8 என்று கட்டுப்படுத்தியது, பின்னர் நான்காவது ஓவரில் மழை பெய்ததால் 42 என்ற திருத்தப்பட்ட இலக்கை துரத்தியது. கடந்த வாரம் ஐபிஎஸ்எ உலக விளையாட்டுகளில் பார்வையற்ற கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது. உலக விளையாட்டு போட்டிகளில் இது முதல் இறுதிப்போட்டியாகும், மேலும் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டியில் வென்றது.